நாற்காலிக்காகக் கல்லெறிந்த அமைச்சர் நாசர், பூமி பூஜையின் போது அறுகம்புல்லை நனைத்து வைக்க அதட்டிய காட்சிகள் வரைலாகி வருகிறது.
சென்னை அடுத்த திருவேற்காட்டில் 56 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அங்குப் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களில் அறுகம்புல் இல்லாததை அறிந்து அமைச்சர் அறுகம்புல் எங்கே என கேட்டார். இதனால் பதற்றமடைந்த அருகிலிருந்த நபர் அறுகம்புல்லைக் கொண்டு வந்தார்.
அதனைத் தண்ணீரில் நனைக்காமல் அப்படியே வைத்ததால் கடுப்பான அமைச்சர் தண்ணீரில் நனைத்து வைக்கும்படி அறிவுறுத்தினார்.
நாற்காலிக்காகக் கல்லெறிந்த அமைச்சர் நாசர், தற்போது அறுகம்புல்லுக்காகத் தொழிலாளியை அதட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது.