திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி, போக்சோ நீதிமன்றத்தில் ஆரம்பாக்கம் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜீ பிஸ்வகர்மா என்பவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரியிடம் ஆரம்பாக்கம் போலீசார் மனு அளித்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.