சென்னை அடையாற்றில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு நடத்திய திமுக கவுன்சிலர் அங்குச் சுற்றித்திரியும் எலிகளை மாணவர்களுக்கே சமைத்துக் கொடுக்க வேண்டியது தானே எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு மண்டலத்திற்குட்பட்ட 178 வார்டு திமுக உறுப்பினர் பாஸ்கரன், அப்பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடத்தினார்.
அப்போது பள்ளி ஒன்றின் உணவு தயாரிக்கும் கூடத்திற்குச் சென்ற அவரிடம், எலித்தொல்லைகள் அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதற்கு அலட்சியமாகப் பதிலளித்த திமுக கவுன்சிலர் பாஸ்கரன், எலிகளைப் பிடித்து மாணவர்களுக்குச் சமைத்துக் கொடுக்க வேண்டியது தானே எனத் தெரிவித்தார்.
இவரின் பதிலைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பதில் கருத்து தெரிவிக்காமல் நின்றனர். திமுக கவுன்சிலரின் இந்த கருத்துக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.