உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரைக் கொண்டு வர அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கோயிலின் புனிதத்தன்மை, தூய்மை மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலைப் பராமரிக்கப் பக்தர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.