எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தைக் கண்டு திமுகவினரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் உலக நாடே இந்தியாவைத் திரும்பிப் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நிதானத்தில் இல்லை எனவும் கூறினார்.