ஜூலை புயல் என்ற பெயரில் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியை ரஷ்யா மேற்கொண்டது. கடந்த 23-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது நேற்று வரை நடைபெற்றது.
பசிபிக், ஆர்க்டிக், பால்டிக் மற்றும் காஸ்பியன் கடல்களில் நடைபெற்ற இந்த பிரமாண்ட கடற்படை பயிற்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர்.
மேலும் 150க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. எதிரி நாட்டு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிப்பது குறித்து பயிற்சி எடுக்கப்பட்டது.