சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் பேருந்து பயணிகளிடம் செல்போன்களை தொடர்ச்சியாகத் திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய பேருந்து ஒன்றில் முருகன் எனும் பயணி ஏறினார். அப்போது அவரின் செல்போன் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 செல்போன்களை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.