திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தத்துக்கும், அவரது சித்தப்பா தண்டபாணிக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தண்டபாணிக்குச் சொந்தமான பள்ளியின் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகானந்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த தண்டபாணி, கூலிப்படையை ஏவி முருகானந்தத்தை வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டபாணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.