பிரளய் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது. பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
இது, இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் செயல்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இந்த பிரளய் ஏவுகணை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும்.