செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? - உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
Sep 13, 2026, 12:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

செந்தில் பாலாஜியை தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார்? – உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 04:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார்? என உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பிருப்பதால் தமிழ்நாடு காவல்துறை வழக்கை முறையாக விசாரிக்காமல் இழுத்தடிப்பதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலிருந்தால் வழக்கு விசாரணை எப்போது முடிவடையும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் கொடுத்த ஏழைகளையும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் ஆயுட்காலம் முழுவதும் வழக்கு முடிவுக்கு வராது என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியாற்றிய இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார் என்பதை தாங்கள் அறிய விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சிறு குறிப்பை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags: செந்தில் பாலாஜிApart from Senthil Balajiwho are the middlemen and officials who received bribes? - Supreme Court questions in a flurryஉச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

Next Post

பிரளய் ரக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies