PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியைத் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் விரைவில் அமலுக்குக் கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது UPI பணப்பரிவர்த்தனைக்கு PIN நம்பர் பயன்படுத்தப்படும் நிலையில், அதனைத் தவிர்த்து கைரேகை, முக அடையாள வசதிகளுடன் பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.