துரோகி என வைகோ கூறியதற்கு நியாயம் கேட்டு, ஆகஸ்ட் இரண்டாம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 32 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த தன்னை துரோகி என எப்படி கூறலாம் என கேள்வி எழுப்பினார்.
ஆகஸ்ட் 2 இல் சிவானந்தா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், தன்னை ஊக்கப்படுத்துவதை துரை வைகோ விரும்புவதில்லை தெரிவித்தார். துரை வைகோ தனக்கு எதிராக சதி வேலை செய்ததாக மல்லை சத்யா குற்றச்சாட்டினார்.