கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மின் கம்பத்தில் தீப்பந்தத்தை கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பூர் அடுத்துள்ள சிறுப்பாக்கம் கிராமத்தில் 9வது வார்டு பகுதியில் தெரு மின்விளக்குகள் பழுதடைந்ததாக கூறி, ஊராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மின்கம்பத்தில் தீப்பந்தத்தை கட்டியும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடனடியாக அதிகாரிகள் பார்வையிட்டு மின் விளக்கு சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.