சேலத்தில் ஆடித் திருவிழாவினையொட்டி நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் மல்லர் கம்பம், தீயுடன் சிலம்பம் சுற்றி சிறுவர்கள் அசத்தினர்.
சேலத்தில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 5 வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்று கட்டாரி, சுருளி, பிச்சுவா, பட்டா கத்தி, வெட்டருவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு சாகசங்களை நிகழ்த்தினர். மேலும் மல்லர் கம்பம், ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம் சுற்றி அசத்தினர்.