கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விவசாய நிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை கோயில்களில் வைத்து பூஜை செய்யும் நிறை புத்தரிசி பூஜை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு நாகர்கோவில் அருகே உள்ள பகவதி அம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோன்று, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்களில் நடந்த நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம், மீனச்சல் பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணன் சுவாமி கோயிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெற்கதிர்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.