கீழ்பவானி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு அளித்தார்.
கீழ்பவானி அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணை நிரம்பி உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் கீழ்பவானி கால்வாய்க்கு முன்கூட்டியே ஜூலை 31ஆம் தேதி தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளதாகத் தெரிவித்தார்.