பாப்பாகுடியில் கஞ்சா போதையில் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிறுவனிடம் ஆலங்குளம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார்.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞருடன் தகராறில் ஈடுபட்ட சிறார்களை தடுக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் முருகனை, 17 வயது சிறுவன் கத்தியால் தாக்கினார்.
தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டத்தில் சிறுவன் காயமடைந்தான். வயிற்றில் குண்டு பாய்ந்த சிறுவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும், காவல் உதவி ஆய்வாளர், அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் ஆலங்குளம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயந்தி, வாக்குமூலம் பெற்றார். அப்போது, சிறுவன் அளித்த தகவல்களை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார்.