கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jul 31, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடியும், ராயபுரம் மற்றும் திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குதற்கு ரூ. 430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

குறிப்பாக, ஜனவரி 2022-இல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள ரூ. 360.72 எங்கே செல்கிறது? தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து துர்நாற்றம் வீசுகின்றன என்பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஏற்கனவே, கடந்த 2023-இல் மகளிர் நலனுக்காக ரூ. 4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட “she toilets” என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? இப்படி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது, எங்கே செல்கிறது? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: tn bjpNayanar Nagendran mlaநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுDMK model of theftcorruption and looting even in the toilet: Nayinar Nagendran alleges
ShareTweetSendShare
Previous Post

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம்!

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

Related News

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

5 ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் : கங்குலி

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்

தேனி : உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி – தற்காலிமாக நிறுத்தப்பட்ட காற்றாலைகள்!

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies