இஸ்ரோ, நாசாவின் கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
அதன் பின்னர் இருநாட்டு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்பு பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றன.
பல கட்ட சோதனை முயற்சிகளுக்குப் பிறகு ஜி.எஸ்.எல்.வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிசார் செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டது.
ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேர கவுண்ட்டவுண் நேற்று தொடங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்குப் பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.