சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தனது வார்டில் உள்ள குறைகளை கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் கண்டித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது 42-ஆவது வார்டு கவுன்சிலரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரேணுகா, தனது வார்டில் 9 மாதங்களாக மாநகராட்சி கழிவறை பூட்டியே கிடப்பதாகவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் கூறினார்.
அப்போது அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு மாமன்ற கூட்டத்தில் குறைகளை கூறலாமா என கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் மேயர் பிரியா கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.