சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜையை ஒட்டி அதிகாலை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார்.
தொடர்ந்து, நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமம், நெய் அபிஷகம் தொடங்கி வழக்கமான பூஜைகளோடு நிறை புத்தரிசி பூஜையும் நடைபெற்றது. இதற்காக ஆலப்புழாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வயல்களில் விளைந்த நெற்கதிர்களை தலைச்சுமையாக கொண்டு வந்து சபரிமலை ஐயப்பனுக்கு படைத்தனர்.
நெற்கதிர்கள் கோயில் கருவறைக்குள் வைத்து பூஜை செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. ஆகஸ்ட் 2-வது வாரத்தில் சபரிமலையில் நடக்க வேண்டிய “நிறை புத்தரிசி” பூஜை முன்கூட்டியே இன்று நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.