வெளிநாட்டில் வேலை பார்த்தவரின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து கொண்டு, தட்டி கேட்ட கணவரை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாமி ஐயா என்பவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது, அவரது மனைவியுடன் திமுக பிரமுகர் சதீஷ் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது சாமி ஐயாவிற்கு தெரியவரவே, இதுகுறித்து திமுக பிரமுகரிடம் தட்டி கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிய சாமி ஐயாவை, அடியாட்களை வைத்து சதீஷ் கடுமையாக தாக்கி உள்ளார்.
இதுகுறித்து சாமி ஐயா அளித்த புகாரின் பேரில், திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். 22 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து, மனைவி பெயரில் செலுத்திய 15 கோடி ரூபாயை திமுக பிரமுகர் சதீஷ் அபகரித்ததாகவும், இதுகுறித்து கேட்டால் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை பழக்கம் இருப்பதாக கூறி மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
குடும்பத்திற்காக இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து மனைவிக்கு கணவர் அனுப்பிய பணத்தை திமுக பிரமுகர் அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.