கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 75 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் ஆடி அமாவாசையையொட்டி, பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததோடு, உண்டியல் காணிக்கையும் செலுத்தினர்.
இந்த நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக 75 லட்சத்து 46 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கமும், 154 கிராம் தங்கமும், 376 கிராம் வெள்ளியும் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.