திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 7 நாட்களாக பக்தர்கள் மூலம், 64 லட்சம் ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பூரம் விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுள் ஏராளமானோர் எலுமிச்சை பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை உண்டியல் காணிக்கையாகச் செலுத்தினர்.
எலுமிச்சை பழங்களால் ரூபாய் நோட்டுகள் சேதமாவதைத் தடுக்க கடந்த 7 நாட்களாகச் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
இதில் திருப்பணி உண்டியல்கள் மூலம் 64 லட்சத்து 89 ஆயிரத்து 520 ரூபாய் பணம், 112 கிராம் தங்கம், 3 ஆயிரத்து 975 கிராம் வெள்ளி பக்தர்கள் மூலம் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.