சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1.27 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளது எனக் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
14 நாட்களில் சேர்ந்த காணிக்கையைத் தன்னார்வலர்கள், வங்கி ஊழியர்கள், பக்தர்கள் எண்ணினர்.
இதில் 1.27 கோடி ரூபாய் ரொக்கம், 1 கிலோ 535 கிராம் தங்கம் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைத்துள்ளது எனவும், உப கோயிலின் உண்டியல்களில் ரூ.6.4 லட்சம் ரொக்கம் காணிக்கையாகக் கிடைத்துள்ளது எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.