கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வந்த நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
பத்திரிகானுரைச் சேர்ந்த கோவிந்தன் சக்கிலிநத்தம் பகுதியில் நார் மில் நடத்தி வந்தார். நேற்று இந்த மில்லின் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவிய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.