கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
செயலாளர் சுரேஷ் மாற்றம் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கக்கோரி, பெண் உறுப்பினர்கள் சிலர் மேடையேறி கோஷம் எழுப்பியதால் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அமரவைத்தனர்.