மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த கல்லூரி மாணவரின் 3 விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மங்கைநல்லூர் பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில், மயிலாடுதுறைக்குத் தனியார் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளார்.
சீனிவாசபுரம் பகுதியில் சென்றபோது ஸ்பீடு பிரேக்கில் பேருந்து ஏறி இறங்கியுள்ளது. அப்போது, மாணவரின் கால் சாலையில் மோதியில் 3 விரல்கள் துண்டானது.
இதனைத் தொடர்ந்து, பேருந்து பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மாணவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மாணவரின் கால் விரல் துண்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.