தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த ரஞ்சீத்குமார் என்பவர் 12ஆம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலைய போலீசார் ரஞ்சித்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.