இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் எனக் கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 என்ற புதிய திட்டத்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
தாமதமான பதிவுகளுக்கு எந்த விதமான அபராதம் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லை என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம் எனக் கூறினார்.