சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டும் டெண்டர் கோரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பசுமை பூங்கா மேம்பாடு, வகுப்பறை கட்டடம், சாலை பழுது பார்வை, மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பதிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது.
ஒவ்வொரு டெண்டரும் 5 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது. எந்த டெண்டருக்கும் குறைந்தது 15 நாட்கள் திறந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 24 மணி நேரத்துக்குள் டெண்டர் முடிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாகவும்,
இது ஏற்கனவே தெரிந்த ஒப்பந்ததாரர்களுக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.