உத்தரப்பிரதேசத்தில் ஸ்விக்கி, பிளிங்கிட் டெலிவரி ஊழியர் போல் நகை கடையில் நுழைந்து கொள்ளையடித்த இருவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
காசியாபாத் பகுதியில் கடந்த 24ஆம் தேதி நகை கடைக்குள் ஸ்விக்கி, பிளிங்கிட் டெலிவரி ஊழியர் உடையில் புகுந்த இருவர், கைத்துப்பாக்கியை காண்பித்து, சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகளான கபில் மற்றும் மனீஷ் ஆகியோரை காலில் சுட்டுப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.