சென்னை பல்கலைக்கழக நிர்வாகம், தங்களது சம்பளத்தைக் குறைக்க முயற்சிப்பதாக கூறி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலர்களின் தற்போதைய சம்பளத்தைக் குறைக்க நிர்வாகம் முடிவெடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் நூற்றுக்கணக்கானோர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய சென்னை பல்கலைக்கழக அலுவலர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், சம்பள குறைப்பால் பல்கலைக்கழக ஊழியர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கும் எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு சம்பள குறைப்பு நடவடிக்கையை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.