ரிதன்யா தற்கொலை வழக்கில் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகக் கைதான ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரின் பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரிதன்யாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக உடற்கூராய்வில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைக் கேட்டுக் குறுக்கிட்ட நீதிபதி, ரிதன்யாவின் உடற்கூராய்வு அறிக்கை முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர் ரிதன்யா – கவின்குமாரின் செல்போன், சமூக வலைத்தள தரவுகள் குறித்த தடய அறிவியல் மற்றும் முழுமையான உடற்கூராய்வு அறிக்கையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.