பிரான்சில் மைக்கேல் ஜாக்சனின் அழுக்கு சாக்ஸ் 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே தலைசிறந்த டான்ஸர் மற்றும் ‘கிங் ஆப் பாப்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் 1997இல் பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைம்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது மைக்கேல் ஜாக்சனின் சாக்ஸ், அவரது ஒப்பனை அறைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட்ட நிலையில், 8 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாகக் கூறப்படுகிறது.
மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய கையுறை கடந்த 2009ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய்க்கும், அவர் அணிந்திருந்த தொப்பி கடந்த 2023ஆம் ஆண்டு 70 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.