மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் நடக்க முடியாத அளவுக்கு சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் இது வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் செய்த சதி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டி கைது செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.