யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை தேசிய பண பரிவர்த்தனை கழகம் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது.
அதன்படி GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆட்டோபே பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் எந்நேரத்திலும் நடைபெறுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயலாக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் யுபிஐ ஆட்டோபே சேவைக்கான பணம் பிடித்தம் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.