தஞ்சை பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு இருவேறு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் 5 நிமிட இடைவெளியில் புறப்பட்டுச் சென்றுள்ளன.
5 நிமிடம் பின்னால் எடுத்த தனியார் பேருந்து முந்திக் கொண்டு 25 நிமிடம் முன்னதாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், இருதரப்பு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ வைரலான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.