இந்தியாவைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த இவிகோ குழுமத்தைக் கைப்பற்றுகிறது.
டாடாவின் இரண்டாவது பெரிய கைப்பற்றலாக வந்தமைத்திருக்கிறது இந்த ஒப்பந்தம். சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
இத்தாலி அரசும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கைப்பற்றலுக்குப் பின்பு இத்தாலி பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிறுவனம் டீலிஸ்ட் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.