ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தைச் செப்டம்பர் 2ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.
கடந்தாண்டு EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட EV ஃபன் கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பு நிலை வடிவமாக இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CCS2 சார்ஜிங், முன்பக்க அலாய் வீல், TFT ஸ்கிரீன் போன்ற அம்சங்கள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.