அயர்லாந்தில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயர்லாந்தின் டப்ளினில் 32 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்தோஷ் யாதவை 6 இளைஞர்கள் தாக்கியதில் அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசாரை அணுகியதாகவும், ஆனால் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் சந்தோஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் அயர்லாந்தின் டல்லாட்டில் வயதான இந்தியர் மீது மர்ம நபர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியதுடன், அவரது ஆடையைக் களைந்து கொடுமைப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.