கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைப்பேட்டையில் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்கும் பணி 4-வது முறையாக அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சந்தைப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்க அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட பணியையும் ஏற்கனவே 3 முறை அப்பகுதிவாசிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் போலீசாரின் துணையுடன் 4வது முறையாக மீண்டும் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்கும் பணியைத் தொடங்க அதிகாரிகள் வருகை தந்தனர்.
அப்போது அங்கு ஒன்று திரண்ட குடியிருப்பு வாசிகள், சம்பந்தப்பட்ட இடம் தனிநபருக்குச் சொந்தமானது எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை மீண்டும் தடுத்து நிறுத்தினர்.