அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தவறாக வழிநடத்திவிட்டதாக பலூச் தலைவர் மிர் யார் பலூச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தானில் எண்ணெய் வளங்கள் இல்லை என்றும், அங்கு எண்ணெய் வளம் இருப்பதாக அசிம் முனீர் தவறாகக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய், எரிவாயு, தாமிரம், லித்தியம், யுரேனியம் மற்றும் அரிய மண் தாதுக்கள் பலூசிஸ்தான் பிரதேசத்திலே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பலூசிஸ்தான் பிரதேசத்தில் உள்ள எண்ணெய், எரிவாயு, தாமிர வளங்கள் பலூச் மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் மிர் யார் பலூச் தெரிவித்துள்ளார்.