திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலா தளத்தில் சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 2023 ம் ஆண்டு முக்கொம்பு சுற்றுலாதளத்தில் தனது காதலருடன் அமர்ந்து இருந்த சிறுமியை மிரட்டிய காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகச் சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்நிலைய போலீசார் உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சசிகுமார் மற்றும் காவலர்கள் சித்தார்த்தன், பிரசாத் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் மூன்று பேரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் வருண்குமார் உத்தரவிட்டார்.
மேலும், மற்றொரு காவலரான சங்கரராஜ பாண்டியன் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீதும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் டிஐஜி வருண் குமார் தெரிவித்துள்ளார்.