பீகாரில் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்களைத் தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ சேட்டன் ஆனந்த் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் எம்எல்ஏ சேட்டன் ஆனந்த் மன்னிப்பு கேட்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.