பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
243 சட்டமன்றத் தொகுதிகளில் 90 ஆயிரத்து 817 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய இந்த பட்டியலை 38 மாவட்ட ஆட்சியர்களும், அனைத்து அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் பட்டியலில் விடுபட்டவர்கள் செப்டம்பர் 1-ம் தேதி வரை பெயர்களைச் சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.