விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சென்றுக்கொண்டு இருந்த பேருந்து திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதால் பெண் ஒருவர் கையில் வைத்து இருந்த ஒரு வயதுக் குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு காயம் ஏற்பட்டது.
விருதுநகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தனது சகோதரியைக் கைக்குழந்தைகளுடன் அழைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்தார்.
பேருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சென்றுக்கொண்டு இருந்த போது திடீரென ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார்.
இதனால் படிக்கட்டின் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்த மதன்குமார், கையில் வைத்து இருந்த குழந்தையோடு கீழே விழுந்தார்.
அதே போல அவரது சகோதரியின் கையில் உறங்கிக்கொண்டு இருந்த ஒரு வயதுக் குழந்தை சாலையில் தூக்கிவீசப்பட்டது.
இந்த விபத்தில் மதன்குமார் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் விழுந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.