2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளில் “பார்க்கிங்” திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “பார்க்கிங்” படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகர் விருதை பெறுகிறார்.
“உள்ளொழுக்கு” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்