தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக பணியாளர்கள் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.