கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாலியாம்பட்டியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரும், முத்துலட்சுமி என்ற பெண்ணும் தரகம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயம் அடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.